காடை கிரேவி செய்வது எப்படி

காடை கிரேவி 


 


காடை என்பது ஒரு சிறிய பறவை, இதன் இறைச்சி மனிதர்களுக்கு ஏராளமான பயனுள்ள கூறுகளைக் கொண்டுள்ளது. காடை கிரேவி சில பயனுள்ள பண்புகளை கொண்டுள்ளது.

சுவை சமைத்த உணவின் தனித்தன்மையை வலியுறுத்துவதோடு அதை மிகவும் அசாதாரணமாக்கும் 

காடை கிரேவி முற்றிலும் எந்த ஒவ்வாமை எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாது.

 செய்முறை மற்றும் தேவையான பொருட்கள்: 


தேவையான பொருட்கள் :
  • காடை - 2 
  • சின்ன வெங்காயம் - 50 கிராம் 
  • தக்காளி - 2 
  • மிளகாய் - 3 
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு 
  • மல்லி தூள் - 1 டேபிள்ஸ்பூன்
  •  மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
  • காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
  •  கரம் மசாலா - 1/2 டேபிள்ஸ்பூன் 
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
  •  கிராம்பு - 2 
  • ஏலக்காய் - 2 
  • பிரியாணி இலை - 1 
  • பட்டை - சிறிதளவு 
  • சோம்பு - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறைை : 

ஒருு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் .எண்ணெய் சூடானதும் பட்டை வகைகள் சேர்க்கவும் அதன் பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும் . வெங்காயம் சீக்கிரம் வதங்குவதற்கு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதன் பின்னர் வெட்டி வைத்த தக்காளி மிளகாய் சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் கால் டீஸ்பூன் மஞ்சள்,1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் ,1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டேபிள்ஸ்பூன் காஸ்மீர் மிளகாய்த்தூள்,1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின்னர் 1/2 எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விடவும் இதனுடன் காடையை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும்.15 நிமிடங்கள் கழித்து மூடிய திறந்து பார்க்கவும் இதனுடன் சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும் இதோ சுவையான காடை கிரேவி தயார்.